ஸ்டான்லி மருத்துவமனையின் சூப்பர் ஷ்பெஷாலிட்டி கட்டடம், கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுகொண்டது. இதன் பின்னர் இன்று ஊரடங்கு குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று, சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுகொண்டார்.
இதன் பின்னர் இன்று பேசிய அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் 1,950 கொரோனா படுக்கைகள் உள்ளன. தமிழகத்தில் புதிதாக 12,500 ஆக்ஸிஜன் வசதி அடங்கிய படுக்கைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். மேலும் 12,500 படுக்கைகள் தேவை என மருத்துவர்கள் கேட்டார்கள். அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ரெம்டிசிவிர் கீழ்ப்பாக்கத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மக்களின் சிரமத்தை குறைக்க கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலியில் விநியோகம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.