Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூக்கியடிக்கப்பட்ட ஜார்ஜ்: கரன்சின்ஹா புதிய ஆணையராக நியமனம்!

தூக்கியடிக்கப்பட்ட ஜார்ஜ்: கரன்சின்ஹா புதிய ஆணையராக நியமனம்!

Webdunia
சனி, 25 மார்ச் 2017 (10:53 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


 
 
இதனையடுத்து சென்னை மாநகர ஆணையராக இருந்த ஜார்ஜை பணியிட மாற்றம் செய்த தேர்தல் ஆணையம் அவருக்கு பதிலாக கரன்சிஹாவை நியமனம் செய்துள்ளது.
 
சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார். எனவே அவரை பதவியில் இருந்து உடனடியாக மாற்ற வேண்டும் என திமுக உள்ளிட்ட சில கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தது.
 
இந்த புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் புதிய ஆணையரை நியமிக்க 3 போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் கேட்டது. தற்போது ஏடிஜிபிகளாக உள்ள கரன்சின்ஹா, அசுதோஷ் சுக்லா, திரிபாதி ஆகியோரது பெயரை அனுப்பினார் தலைமைச் செயலாளர்.
 
அதில் கரன்சின்ஹாவை சென்னை மாநகர ஆணையராக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு முறையாக தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு அனுப்பினார். இதனையடுத்து ஜார்ஜை மாற்றி கரன்சிஹாவை நியமிப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments