உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை கண்டறிய சென்னையில் புதிய ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,32,89,579 ஆக உயர்ந்துள்ளது. உருமாற்றம் அடையும் கொரோனாவால் நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை கண்டறிய சென்னையில் புதிய ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். டி.எம்.எஸ் வளாகத்தில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆய்வகம்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் உருமாற்றத்தை கண்டறிய 11வது ஆய்வகமாக சென்னை ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.