தமிழகத்தில் இருபெரும் திராவிட கட்சிகளுடன் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டன. இவ்விரு கட்சிகளுக்கு மாற்றாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தினகரன் தொடங்கினார். அதேபோல கமல் போன்றவர்களும் கட்சியைத் தொடங்கினர். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் தமிழகத்தில் தலைமை வெற்றிடமாக உள்ளது என காரணம் கூறினர்.
இதனையடுத்து தினகரன் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற முயன்றார் இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி அதிமுகவுக்கே இரட்டை இலை உறுதியானது.
இந்நிலையில் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட தினகரன் கட்சிக்கு அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம். பரிசுப் பெட்டியை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய அன்றே அமோகமாக தங்கள் கட்சியை பிரபலப்படுத்தி டிவிட்டரிலும் டிரண்டாக்கினர்.
நேற்று தேர்தல் முடிவடைந்ததை அடுத்து இன்று தினகரன் தனது அமமுக( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ) என்பதை அசியல் கட்சியாக இன்னும் ஒரு வாரத்தில் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாகதவும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அமமுகவில் துணைபொதுச்செயலாளராக தினகரன் பதிவு வகித்த நிலையில் தற்பொழுது அவர் சசிகலாவுக்கு பதிலாக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
அவரது உறவினரான சசிகலா பெங்களூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.