Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இனி காத்திருக்க தேவையில்லை.. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு சூப்பர் வசதி..!

Airport

Siva

, திங்கள், 11 நவம்பர் 2024 (09:54 IST)
சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Self Baggage Drop வசதியின் செயல்பாடு என்ற வசதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து பார்க்கலாம்.

பயணிகள் தானியங்கி இயந்திரத்தில் தங்களின் PNR எண்ணை பதிவு செய்து, போர்டிங் பாஸை பெற்றுக்கொள்ள முடியும். அதன் பிறகு, அந்த போர்டிங் பாஸை மற்றொரு இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும்.

அதில் எந்நெற்த பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று விவரங்கள் தோன்றும். பின்பு, அதில் "OK" கொடுத்து உடைமைகளின் எண்ணிக்கை குறித்து பதிவிட வேண்டும்.

அப்போது உடைமைகளின் மொத்த எடை ஸ்கிரீனில் தோன்றும். அதன் பிறகு, உடைமைகளில் ஒட்டிக்கொள்வதற்கான Tag-கள் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும். அந்த Tag-ஐ நாமே ஒட்டி, உடைமைகளை கன்வயர் பெல்டில் வைத்துவிட்டால், அவை விமானத்தில் ஏற்றப்படுவதற்குத் தயாராகி விடும்.

இதனால் பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் 440 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?