நெய்வேலி என்எல்சி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
என்எல்சி நிர்வாகத்தினர் விளைநிலங்களை கையகப்படுத்தி அதிலுள்ள பயிர்களை சேதப்படுத்தியதாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் என்எல்சி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்தினர்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நெய்வேலி போராட்டம் காரணமாக அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். என்எல்சி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடியதாக அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்
இதனை அடுத்து போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது.