தமிழக அளவில் போக்குவரத்து பயணிகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவும், அவர்களின் தண்ணீர் தாகத்தை போக்குவதற்காக, போக்குவரத்து துறை சார்பில், கடந்த 2013ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 15ம் தேதி முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.
அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் புகைப்படம் ஒவ்வொரு வாட்டர் பாட்டீல்களிலும் இருந்தது, ரூ 10-க்கு துவங்கப்பட்ட இந்த திட்டம், அவர் மறைவிற்கு பின்பு, தற்போதைய எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் அதே துறையை அங்கம் வகிக்கும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதே அம்மா வாட்டர் பாட்டீல்களில் ஜெயலலிதாவின் படத்தை அகற்றியதோடு, அந்த வாட்டர் பாட்டீல்களின் வரத்தும் குறைந்தது.
தற்போது, அவரது (போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்) சொந்த தொகுதியான, கரூர் தொகுதியில், கரூர் பேருந்து நிலையத்தில் அம்மா வாட்டர் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. கரூர் பேருந்து நிலையத்தில் இரண்டு விற்பனை நிலையங்கள் உள்ள நிலையில், ஒன்று மூடப்பட்டதோடு, மற்றொன்று திறக்கப்பட்டு, அதில் வெறும் காலி நிலையமாக ஒன்று கூட, இல்லாமல், தாகத்திற்காக போக்குவரத்து பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனவே, ரூ.12 முதல் 20 வரை விற்பனை செய்யப்படும், வாட்டர் கேன்களை மக்கள் வாங்கி செல்கின்றனர். மேலும், ஆங்காங்கே அ.தி.மு.க சார்பிலும், அரசு சார்பிலும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல், மோர்பந்தல் உள்ளிட்டவைகளை திறந்து விநியோகிக்கப்படும் நிலையில், தற்போது, போக்குவரத்தில் பயணம் செய்யும் பயணிகள் விலை குறைந்த அம்மா வாட்டர் கேன் வாங்க முடியாமல் திணறுகின்றனர்.
ஆளுகின்ற அம்மா (ஜெயலலிதா) ஆட்சி என்கின்ற எடப்பாடி பழனிச்சாமியின் அரசில் அங்கம் வகிக்கும், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது சொந்த தொகுதியில் போக்குவரத்து பயணிகளை தாகத்திற்கு தண்ணீர் கூட கொடுக்காமல் விட்டு விட்டுள்ளது பரிதாப நிலை என பொதுமக்களும், சமூக நல ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்