Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்க தடையில்லை: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (15:39 IST)
திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க தடை இல்லை என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
சென்னை வேளச்சேரி சேர்ந்த கார்த்திக் என்பவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 92.5 நிலத்தில் ஆக்கிரமித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கப்பட உள்ளதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்தார்.
 
கிரிவலப்பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் மேலும் அந்த பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால் கட்டுமான பணிகள் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியிருந்தர்.
 
இந்த மனு மீதான விசாரணை நடந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் முனீஸ்வரர் பண்டாரி மற்றும் மாலா ஆகியோர் அளித்துள்ளனர். இந்த தீர்ப்பின் பட்டா நிலத்தில் சிலை அமைப்பது ஆக்கிரமிப்பு என்று கூற முடியாது என்றும் பட்டா நிலத்தை எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் இந்த வழக்கை வாபஸ் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டதை ஏற்று மனுதாரர் வாபஸ் பெற அனுமதி அளித்து வழக்கை தள்ளுபடி செய்யப்படுவதாகவும் கூறினர்.
 
 இதனை அடுத்து திருவண்ணாமலையில் குறிப்பிட்ட இடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைப்பதற்கான தடை நீங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments