சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பல நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு சுமார் 1000 என்று இருந்து வரும் நிலையில் சென்னையில் இதுவரை 1,58,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,45,629 பேர் குணமடைந்து வீட்டதால் தற்போது வெறும் 9868 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் ஒரு தெருவில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த பகுதி நோய் கட்டுப்பாடு பகுதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததை அடுத்து தற்போது சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை மக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.