மருத்துவ படிப்புக்கான ரேங்க் பட்டியலில் எந்த முறைகேட்டிற்கும் இடமில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இன்று மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதற்கான மாணவர்கள் தரவரிசை பட்டியலை முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் பிற மாநில மாணவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழக மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் பிற மாநில மாணவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் பிற மாநில பட்டியலிலும், தமிழக பட்டியலிலும் ஒரே மாணவரின் பெயர் எப்படி இடம்பெற முடியும்.
மேலும் தரவரிசை பட்டியல் தயாரிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர். பட்டியலை திருத்தி மீண்டும் வெளியிட வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மருத்துவ படிப்புக்கான ரேங்க் பட்டியலில் எந்த முறைகேட்டிற்கும் இடமில்லை. ரேங்க் பட்டியல் வெளிப்படையாக உள்ளது; எந்த பிரச்னைக்கும் இதில் இடமில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியுள்ளார்.