Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ஓட்டல்களில் அதிக கட்டணமா? ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (10:00 IST)
ஜூன் 8 முதல் ஹோட்டல்களை திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் தமிழகத்தில் நாளை முதல் ஹோட்டல்கள் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் ஹோட்டல்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டுதல் குறித்து சற்றுமுன் பார்த்தோம்
 
இந்த நிலையில் நாளை முதல் திறக்கப்படும் ஹோட்டல்களில் அதிக செலவினங்கள் இருப்பதால் ஹோட்டல்களில் உணவக கட்டணங்கள் உயரும் என்ற செய்தி சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது 
 
தமிழகம் முழுவதும் நாளை முதல் திறக்கப்படும் ஹோட்டல்கள் திறக்கப்படும் நிலையில் அனைத்து ஹோட்டல்களிலும் பழைய கட்டணமே தொடரும் என்றும் ஹோட்டல்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட மாட்டாது என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
 
மேலும் இதுநாள் வரை பார்சல்கள் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த நிலையில் நாளை முதல் உணவகங்களிலும் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் உணவுக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்றும் விளக்கமளித்தனர் இதனை அறிந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
 
இருப்பினும் ஹோட்டல் கட்டணம் இன்னும் ஒரு சில நாட்களில் உயரும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது தமிழக அரசின் வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க அதிக செலவுகள் ஆகும் என்பதாலும் ஹோட்டல்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலர் வெளியூருக்கு சென்று விட்டதால் தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் இதன் காரணமாக ஹோட்டல்களில் கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் ஏசி மின்சார ரயில்.. ஐ.சி.எஃப் அதிகாரிகள் தகவல்..!

அமெரிக்கர்களை திருமணம் செய்தால் குடியுரிமை: ஜோ பைடனின் திட்டம் ரத்து..!

முதல்வருக்கு வாங்கிய சமோசா மாயம்.. சிஐடி விசாரணை.. கேலி செய்யும் எதிர்க்கட்சிகள்..!

பெண்கள் புர்கா அணிய தடை.. மீறினால் ரூ.10,000 அபராதம்: சுவிஸ் அரசு உத்தரவு..!

முதல்வருடன் விமானத்தில் செல்ல மறுத்தாரா? ஆளுனரின் மதுரை பயணம் திடீர் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments