ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரம் குறைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து கால்நடை பராமரிப்பு துறை விளக்கம் அளித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக பாலமேடு அவனியாபுரம் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் பிரபலம் என்பதும் தெரிந்த.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமாக காலை எட்டு மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணி முதல் 2 மணி வரை மட்டுமே நடைபெறும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது
இந்த நிலையில் இது குறித்து கால்நடை பராமரிப்பு துறை விளக்கம் அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம் போல் காலை 8:00 மணி முதல் 4:00 மணி வரை நடைபெறும் என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நேரம் குறைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.