Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்டனில் நள்ளிரவில் அலறல் சத்தம் : மன்னார்குடி வட்டாரம் திக்...திக்...

Webdunia
புதன், 3 மே 2017 (13:30 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில், இரவு நேரத்தில் அலறல் சத்தங்கள் கேட்பதால் கார்டன் ஊழியர்கள் பீதியில் ஆழ்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
போய்ஸ்கார்டன் வீட்டில் முதல்வர் ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா மற்றும் கார்டன் ஊழியர்கள் ஆகியோர் வசித்து வந்தனர். மேலும், ஆதரவற்ற 17 குழந்தைகளும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த குழந்தைகளோடு ஜெயலலிதா உணவு அருந்துவார். அதேபோல், மகிழ்ச்சியான தருணங்களில் அவர்களுக்கு பரிசு பொருட்களும் ஜெயலலிதா வழங்குவார். தற்போது அவர் மரணமடைந்து விட்டதால் போயஸ் கார்டன் வீடு களையிழந்து கிடக்கிறது. 
 
ஒரு பக்கம், ஜெ.வின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. மேலும், அவரின் ஆவி பழிவாங்கி வருவதாக, சில சாமியார்களும் கூறி பீதியை கிளப்பி வந்தனர். முக்கியமாக, போயஸ் கார்டன் வீட்டில் தங்கியிருப்பவர்கள் மற்றும் ஜெ.வின் விவகாரங்களில் தலையிடுபவர்களுக்கு தொடர்ந்து பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள்.


 

 
சசிகலா, தினகரன் ஆகியோர் சிறைக்கு சென்று விட்டனர். ஜெ. அவ்வப்போது தங்கும் கொட நாட்டு பங்களாவில் கொள்ளையடித்த கனகராஜ் கார் விபத்தில் பலியானார். மேலும், அவருக்கு உதவியாக இருந்த  சயன் என்பவரும் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் மரணமடைந்தனர். இவையனைத்தும் போயஸ் கார்டனில் தங்கியுள்ள ஊழியர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 
இரவு நேரங்களில் ஜெ.வின் அறையிலிருந்து ஏதோ அலறல் சத்தம் கேட்பதாக கார்டன் ஊழியர்கள் கூறிவருகின்றனர். இது, அங்கு தங்கியிருக்கும் சிறுமிகளுக்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மன்னார்குடி வட்டாரத்திடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன் தினகரன் அங்கு சென்று தங்கியுள்ளார். ஆனால், அவரை தூங்க விடமால் சில அலறல் சத்தம் அவரை தொந்தரவு செய்ததாம். எனவே, மறுநாளே தினகரன் அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். அதன் பின் ஒரு நாள் சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஜெ.வின் அறையில் ஒரு நாள் தங்கியிருந்தாராம். அன்று இரவு வழக்கத்திற்கு மாறான அலறல் சத்தம் கேட்டதாம். 
 
ஜெ.வின் ஆவி உக்கிரமாக இருப்பதாகவும், அது பலரையும் பழி வாங்க துடிப்பதாகவும் சிலர் பீதியை கிளப்பி வரும் வேளையில், இந்த விவகாரம் அங்கு தங்கியிருக்கும் கார்டன் ஊழியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ஆவி, அமானுஷ்யம் ஆகியவற்றில் நம்பிக்கையில்லாதவர்கள் இதை கண்டிப்பாக மறுப்பார்கள். ஆனால், அதை நம்புகிறவர்கள்தானே இங்கே ஏராளம்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்கும் பெண்ணை முத்தமிடுவது பாலியல் துன்புறுத்தல் ஆகாது!? - நீதிமன்றம் அளித்த உத்தரவு!

கோலியை தூக்கிட்டா 4 நாள்ல ஆஸ்திரேலியா ஜெயிச்சிடும்.. ஆனா..?! - ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர்!

தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி கருத்துக்கு கண்டனம்..!

ஐ.நா-வுக்கான ஈரான் தூதரை எலான் மஸ்க் ரகசியமாக சந்தித்தாரா? பரபரப்பு தகவல்..!

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments