Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை கோயிலில் பிராமணரல்லாத நபர் அர்ச்சகராக நியமனம்! அரசு அதிரடி!

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (15:31 IST)
கோப்புப் படம்

மதுரையில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் பிராமணரல்லாத பிரிவைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி 50 ஆண்டுகளாக இருந்தாலும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் பிராமணரல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவது என்பது எட்டாக்கனியாக இருந்தது. இதற்காக 2006 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பாடசாலைகள் அமைக்கப்பட்டு 206 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அது 10ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு தமிழக அரசின் உத்தரவு செல்லும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் யாரும் அர்ச்சகராக நியமிக்கப்படாமல் அரசு அலட்சியம் காட்டியது.

இந்நிலையில் இப்போது, துரை நாகமலைபுதுக்கோட்டையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிள்ளையார் கோயில் அர்ச்சகராக, தியாகராஜன் என்பவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவானது தமிழகத்தில் உள்ள பிராமணரல்லாத பிரிவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments