இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது தென்மேற்கு பருவமழை சீசன் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக வடகிழக்கு பருவமழை தொடங்கும் தேதி குறித்து அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டு மழைக்காலங்கள் உண்டு என்பதும், இந்த இரண்டு மழைக்காலங்களில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நல்ல மழை பெய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவ மழையால் பல மாநிலங்களில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை வெளியேறத் தொடங்கிவிட்டது.
இதனை அடுத்து அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.