Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களில் பங்களித்த 'செவிலித்தாய்' கதீஜா!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (20:55 IST)
செவிலியராகப் பணியாற்றி வந்த கதீஜா பீவி தன் பணிக்காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களில் பங்களித்து இன்றுடன் ஓய்வு  பெற்ற நிலையில், தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவரை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’33 ஆண்டுகளுக்கு முன்பு தான் கருவுற்றிருந்த நிலையில் செவிலியராகப் பணிக்குச் சேர்ந்த கதீஜா பீவி அவர்கள், தனது பணிக்காலத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களில் பங்களித்து இன்று ஓய்வுபெறுகிறார்.

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புக்கும் அனைத்து மருத்துவப் பணியாளர்களின் பெருந்தொண்டுக்கும் அடையாளச் சின்னமாக இவரது பணி அமைந்திருக்கிறது.

பத்தாயிரம் பிள்ளைப்பேற்றுக்குத் துணைபுரிந்து பல குடும்பங்களில் மகிழ்ச்சியை விதைத்த 'செவிலித்தாய்' கதீஜா பீவி அவர்களுக்கு எனது நன்றி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்து, அவரது ஓய்வுக்காலம் நிறைவானதாகத் திகழ்ந்திட வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டி.. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் முயற்சி..

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments