Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனியின் தோனி கேட்டது கப்பல்துறை – பாஜக கொடுப்பது ரயில்வேத்துறையா ?

Webdunia
திங்கள், 27 மே 2019 (09:03 IST)
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தில் வென்ற ஒரே நபரான ஓ பி ரவீந்தரநாத்துக்கு மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் உதவி இல்லாமல் பாஜகவே தனிப்பெரும்பாண்மைக்குத் தேவையான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. வரும் 30 ஆம் தேதி பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் அமைச்சரவையில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு இடம் அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அமைச்சரவைப் பற்றி எந்த தகவலும் பாஜக வட்டாரத்தில் இருந்து வெளியாகவில்லை.

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். துணை முதல்வர் ஒபிஎஸ், தன் மகன் ஓபி ரவீந்தரநாத் தேனி தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு அமைச்சரவையில் கப்பல் மற்ற்ம் போக்குவரத்துத்துறை பதவி கேட்டு வருகிறாராம். ஆனால் கப்பல்துறைக்கு பதிலாக கடந்த ஆண்டு பொன் ராதாகிருஷ்ணன் வகித்த மத்திய ரயில்வேத் துறை இணையமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட இருப்பதாக செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments