Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணிபேட்டையில் ஒரே இடத்தில் 4 சிறுமிகளுக்கு திருமணம்.. அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை..

Mahendran
திங்கள், 17 ஜூன் 2024 (12:43 IST)
ராணிப்பேட்டை அருகே ஒரே இடத்தில் நான்கு சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி நடந்து போது அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து அந்த சிறுமிகளை காப்பாற்றி காப்பகத்தில் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா என்ற பகுதியை அடுத்த நரசிங்கபுரம் என்ற கிராமத்தில் 18 வயது நிரம்பாத நான்கு சிறுமிகளுக்கு இன்று திருமணம் நடைபெற இருப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நான்கு சிறுமிகளின் பெற்றோரிடம் அறிவுரை வழங்கி குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

இதனை அடுத்து அந்த நான்கு சிறுமிகளையும் வேலூர் காப்பகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்றும் அதனால் தான் பதினெட்டு வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தை திருமணம் சட்டப்படி தவறு என்ற விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments