Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூக்குல தொங்குற துர்நாற்றம்... கேவலப்படுத்திய துக்ளக்-கிற்கு நமது அம்மா பதிலடி!!

Advertiesment
நமது அம்மா நாளேடு
, சனி, 8 ஜூன் 2019 (09:02 IST)
அதிமுகவை கேவலமாக சித்தரித்த துக்ளக் பத்திரிக்கைக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா பதிலடி கொடுத்துள்ளது. 
 
சோவின் மறைவிற்கு பின்னர் துக்ளக்கின் ஆசிரியராக இருப்பவர் ஆடிட்டர் குருமூர்த்தி. சமீபத்தில் துக்ளக் பத்திரிக்கையில் ஒரு கார்ட்ரூன் வெளியானது. அதில் பாஜகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். 
 
ஆனால் வீட்டுக்கு வெளியே அதிமுகவினர் அவர்கள் சாப்பிடுவதை நின்று வேடிக்கை பார்த்து நிற்கிறார்கள். அதற்கு ஈபிஎஸ், "உஸ்ஸ்.. யாரும் அழப்படாது. நம்பளையெல்லாம் உள்ளே கூப்பிட மாட்டாங்க. கடைசியா, ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம் என்று கூறுவதாக அந்த கார்ட்ரூன் சித்தரிக்கப்பட்டு வெளியானது. 
நமது அம்மா நாளேடு
இது அதிமுகவிற்கு அவமானமாக பார்க்கப்பட்ட நிலையில், இதற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா பதிலடி கொடுத்துள்ளது. அதிமுக தொடங்கப்பட்டு 42 ஆண்டுகளில், 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. 
 
அதில் தற்போது ஆட்சியில் இருந்து கொண்டே வெற்றி பெற்று, ஆட்சியை தொடர்கிறது. ஒருபோதும் மத்திய அரசின் அதிகாரங்களுக்கு மல்லுக்கு நின்றதில்லை. ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பு, துக்ளக் பத்திரிகை தொடர்ந்து கழகத்தையும், கழக அமைச்சர்களையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறது. 
நமது அம்மா நாளேடு
சோ நடத்திய பாரம்பரியமிக்க பத்திரிகை இப்போது நாளெல்லாம் பெட்டிக் கடைகளில் வாசிப்பதற்கு ஆள் இல்லாது தூக்கில் தொங்குகிற துர்நாற்ற பத்திரிகையாக மாறிவிட்டது என்பதைதான் இது காட்டுகிறது. எனவே இதுபோன்ற நாலாந்திர விமர்சனங்களுக்கு கழக சிப்பாய்கள் செவிமடுக்காமல் கடந்து போவது ஒன்றே, நமது பதிலடி என்று நமது அம்மா குறிப்பிட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி பாஜக ஆதரவாளரா? உண்மையை புட்டு புட்டு வைத்த சு.சுவாமி!