அமெரிக்காவில் பணிபுரியும் பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியரின் சென்னை வீட்டில் தோண்ட தோண்ட பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் ஷோபா என்ற இளம் பெண் மற்றும் அவரது கணவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அவர்களது வீடு இருக்கும் நிலையில் அந்த வீட்டில் பழங்கால சிலைகள் ஓவியங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வெளியானது.
இந்த தகவலின் அடிப்படையில் அந்த வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்த போது 17 பழங்கால சிலைகள் மற்றும் தஞ்சாவூர் ஓவியங்கள் மர சிலைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அமெரிக்காவில் உள்ள தம்பதிகளிடம் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த சிலைகள் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் ஒருவனிடம் தகுந்த ஆவணங்கள் இன்றி இந்த தம்பதிகள் வாங்கி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.