கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து புதுப்புது வைரஸ் ஆக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த ஒமிக்ரானுக்கு தடுப்பூசிகள் இன்னும் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது தொற்று உறுதி செய்யப்படுவோரில், 85% பேருக்கு ஒமைக்ரானும் 15% பேருக்கு டெல்டாவும் கண்டறியப்படுகிறது. ஒமைக்ரான் பரிசோதனையின் முடிவுகள் வருவதற்குள், பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் மீண்டு விடுகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.