Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா; ஒமிக்ரான் பாதிப்பா? – தீவிர பரிசோதனை!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (08:49 IST)
தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோரை 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணித்த ஒருவரை சோதித்தபோது அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது மாதிரிகள் ஒமிக்ரான் கொரோனா ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகளை பொறுத்து அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பா என்பது பற்றி தெரிய வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments