Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் மனைவிக்கு ஓராண்டு சிறை தண்டனை: உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (13:56 IST)
முன்னாள் அமைச்சர் மனைவிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

 சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவனுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும்  அவருடைய மனைவி நல்லம்மாள் அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2000ஆம் ஆண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பரமசிவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் காலமானார்.  

இந்த நிலையில்  முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் பரமசிவனின் மனைவி நல்லம்மாள் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனை செல்லும் என்று தீர்ப்பளித்தது.  இதனை அடுத்து மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டி.. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் முயற்சி..

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments