சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதை அடுத்து இரவு நேரத்தில் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகள் பகலில் இயக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பகலில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைவாக இருப்பதால் 20% ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
பகலில் பயணம் செய்ய பொதுவாக பயணிகள் விரும்புவதில்லை என்றும் குறிப்பாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பகல் பயணத்தை தவிர்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரவு நேரத்தில் ரயில்கள் செல்லும் வசதி இருப்பதால் பகலில் ஆம்னி பேருந்துகளில் செல்வதற்கு பயணிகள் முன்வரவில்லை
இதனால் வழக்கமாக சென்னையிலிருந்து 700 பேருந்துகள் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 20 சதவீத ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை 4 மணி முதல் சென்னை மதுரை நெல்லை தென்காசி உள்பட தென் மாவட்டங்களுக்கு ஒரு சில அமைப்புகள் மட்டுமே இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது