திமுக மொத்தம் 21 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அதில் மூன்று தொகுதிகளில் மட்டுமே தென் மாவட்ட தொகுதி என்றும் மீதமுள்ள 18 தொகுதிகளும் மத்திய மற்றும் வட மாவட்ட தொகுதி என்றும் தற்போது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, தேனி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் தென்காசி தொகுதியில் ராணி ஸ்ரீகுமார் ஆகிய 3 தென் மாவட்ட தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற தென் மாவட்ட தொகுதிகள் அனைத்தும் காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று தொகுதிகளில் கூட கனிமொழி போட்டியிடவில்லை என்றால் தூத்துக்குடியில் தொகுதியிலும் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடவில்லை என்றால் தேனி தொகுதியிலும் திமுக போட்டியிட்டு இருக்காது என்று திமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன.
தென் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே திமுக சரியாக போட்டியிடவில்லை என்றும் முழுக்க முழுக்க வட மாவட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது என்றும் தென் மாவட்ட திமுக பிரமுகர்கள் சுத்தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.