Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சைவ உணவு மட்டுமே... அரசு பேருந்து நின்று செல்லும் மோட்டல்களுக்கு நிபந்தனை!

சைவ உணவு மட்டுமே... அரசு பேருந்து நின்று செல்லும் மோட்டல்களுக்கு நிபந்தனை!
, வெள்ளி, 25 மார்ச் 2022 (09:31 IST)
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை உணவகத்தில் நிறுத்த நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
1. உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். 
 
2. சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும்.
 
3. பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும்படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும்.
 
4. உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி CCTV பொருத்தியிருக்க வேண்டும்.
 
5. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடமைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்.
 
6. உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்.
 
 7. உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் (M.R.P) இருக்க வேண்டும். 
 
8. எம்.ஆர்.பி விலையை விட அதிகமில்லாமல் அனைத்து உணவும் விற்கப்பட வேண்டும்.
 
9. உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்ட புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும்.
 
10. உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பயோ கழிவறை இருக்க வேண்டும்.
 
11. கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து கைது செய்யப்படும் மீனவர்கள்! – ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!