Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்! – எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடி போராட்டம்!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (08:26 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக எதிர்க்கட்சிகள் நாளை போராட்டம் நடத்தவுள்ளன.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆர்பாட்டம் நடத்துவதற்கான கூட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி ஐந்து பேருக்கு மிகாமல் அவரவர் இல்லத்தின் முன்பு கூடி கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த போராட்டத்தில் மதிமுக தோழர்களும் கலந்து கொள்ளுமாறு வைகோ தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை திமுக, திக, தமிழ்நாடு காங்கிரஸ், அகில இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments