Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடி பேச ஒரு இடம் இல்லை… தேடுதல் வேட்டையில் ஓபிஎஸ் & கோ!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (11:43 IST)
புதிதாக ஒரு இடத்தில் அலுவலகத்தை உருவாக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கருதுகிறார்கள்.


அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் எழுந்தது. இதனால் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

அலுவலகத்தை திறக்க அனுமதி கோரி ஈபிஎஸ் – ஓபிஎஸ் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்கள் சாவியை பெற்று அதிமுக தலைமை அலுவலகத்தை திறந்தனர். 

ஆகஸ்டு மாதம் 20 ஆம் தேதி வரை அதிமுக தலைமை கழகத்துக்குள் யாரும் செல்லக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் மீண்டும் அங்கு சென்று கட்சி பணிகளை தொடங்க உள்ளனர்.

இதனால் கட்சி பணிகளை மேற்கொள்ள ஓபிஎஸ்-க்கு ஒரு இடம் இல்லை. எனவே புதிதாக ஒரு இடத்தில் அலுவலகத்தை உருவாக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கருதுகிறார்கள். இதற்காக சென்னையில் பல்வேறு இடங்களிலும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தேடி வருகிறார்கள். உரிய இடம் கிடைத்ததும் அங்கு கட்சி தலைமை அலுவலகம் தொடங்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

இது வெறும் டிரைலர் தான்.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments