Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிபி ராதாகிருஷ்ணனுக்கு, ஓபிஎஸ் ஆதரவு எம்.பி. தர்மர் ஆதரவு.. கூட்டணியில் இருந்து விலகினாலும் ஆதரவு..!

Advertiesment
ஓ. பன்னீர்செல்வம்

Mahendran

, செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (12:25 IST)
துணை குடியரசுத் தலைவர் தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியபோதிலும், அதன் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க ஓபிஎஸ் அறிவுறுத்தியதாகவும், அதன் அடிப்படையிலேயே தர்மர், சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், அவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முழுமையாக இருப்பதால், அவர்தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
 
இன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில், முதல் நபராகப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் போக்குவரத்து அபராதம் தள்ளுபடி: தமிழ்நாட்டுக்கும் இது பொருந்துமா?