Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நான்தான் ஒருங்கிணைப்பாளர்; என்கிட்டதான் விருப்ப மனு தரணும்!? – ஓ.பன்னீர்செல்வம்!

நான்தான் ஒருங்கிணைப்பாளர்; என்கிட்டதான் விருப்ப மனு தரணும்!? – ஓ.பன்னீர்செல்வம்!
, புதன், 25 ஜனவரி 2023 (11:29 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுக சார்பில் விருப்பமனுவை வாங்க உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிப்ரவரியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியிலிருந்து வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக அந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள தமக போட்டியிட்டிருந்த நிலையில், இந்த முறை அதிமுகவிற்கே ஜி.கே.வாசன் விட்டுக்கொடுத்துள்ளார். ஆனால் ஏற்கனவே அதிமுக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என பிளவுற்று இருப்பதால் வேட்பாளர் தேர்வு செய்வதே குழப்பதில் இருந்து வருகிறது.

ஒருபக்கம் இபிஎஸ் அணி பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளோடு வேட்பாளர் அறிவிப்பது குறித்து பேசி வருகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலோ தேதி அறிவித்து விருப்பமனுக்களே வாங்க திட்டமிட்டுள்ளனர். இரு தரப்பினரும் இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தினால் யார் அதிமுக வேட்பாளராக அங்கீகரிக்கப்படுவார் என்பதிலேயே குழப்பம் உள்ளது.


இந்நிலையில் விருப்பமனு பெறுவது தொடர்பாக பேசியுள்ள ஓ.பன்னீர்செல்வம் “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் விருப்பமனுக்களை பெற இருக்கிறோம். எங்களுடன் இணக்கமாக இருக்கக்கூடிய கட்சிகள் தொடந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் சந்திக்க உள்ளோம்” என கூறியுள்ளார்.

ஓபிஎஸ் இப்படி பேசிக் கொண்டிருக்க அதிமுக பொதுக்குழு கூட்ட முடிவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி தேர்தல் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் தேதி முடிவடைவதற்குள் பொதுக்குழு முடிவை அங்கீகரிக்க செய்ய எடப்பாடி அணியினர் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று தேசிய சுற்றுலா தினம்! தமிழ்நாட்டின் மிஸ் பண்ணக்கூடாத சுற்றுலா பகுதிகள்!