Publish Date: Thu, 09 Jan 2020 (19:57 IST)
Updated Date: Thu, 09 Jan 2020 (20:01 IST)
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டு வந்த ”Y” பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வத்தின் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய படையின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஓபிஎஸ் மனு அளித்தார். பின்பு மத்திய அரசு ஓபிஎஸ்-க்கு “Y” பிரிவு பாதுகாப்பு வழங்கியது.
இந்நிலையில் தற்போது வழங்கப்பட்ட “Y” பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக காவல்துறை பாதுகாப்பு பணியை தொடரும் என கூறப்பட்டுள்ளது.