தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் காற்றழுத்த மண்டலமாக உருமாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.
அதேபோல், நவம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களில் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரையிலான காலகட்டத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.