தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று மாவட்டங்களின் நிர்வாகங்கள் முன்னேற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருவது என்பதும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வளிமண்டல சுழற்சின், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு ஆகியவை காரணமாக மழை பெய்து வருவது என்பதையும் நாம்பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், இன்று மாலை தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என்றும் கணிக்கப்பட்டுள்ளது.