பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
பள்ளி செல்லாமல் படிப்பை இடையில் நிறுத்திய மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
6 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்கள் பள்ளி செல்லாமல் இடைநிறுத்தம் செய்து இருந்தால் அவர்களை பள்ளிக்கு வரவழைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
மாற்றுத்திறனாளிகள் ஒருவர்கூட பள்ளிக்குச் செல்லாமல் இருக்க கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது