தமிழக அரசின் மகளிர் உரிமை திட்டத்தின் படி இன்று முதல் ஆயிரம் ரூபாய் பயனாளர்களின் வங்கி கணக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தத் திட்டத்தில் ஓடிபி என்ற நடைமுறை எதுவும் இல்லை என்றும் இந்த திட்டத்தின் படி நேரடியாக வங்கியில் பணம் வரும் அல்லது ஏடிஎம் கார்டு மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்
மேலும் ஓடிபி எண்ணை தருமாறு அழைப்பு வந்தால் அந்த தொலைபேசி எண்ணை உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பகிர்ந்து கொள்ளவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கோடிக்கணக்கானைய பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவிருக்கும் நிலையில் அந்த பணத்தை முறைகேடு செய்ய ஓடிபி சிலர் முயற்சித்து வருவதாக கூறப்படுவதால் மாவட்ட கலெக்டர் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது