தீபாவளியை முன்னிட்டு இயக்கப்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகளில் விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்துள்ளது போக்குவரத்துத்துறை.
தீபாவளிக்காக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் பயணித்த நிலையில் அரசு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் பல இயக்கப்பட்டன. டிமாண்டை மனதில் வைத்து தனியார் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விலையை உயர்த்தக்கூடாது என்று போக்குவரத்துத்துறை ஏற்கனவே எச்சரித்தது.
ஆனால் பல ஆம்னி பேருந்துகள் அதை மீறி ஏராளமான தொகைக்கு டிக்கெட் கட்டணம் விதித்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நடவடிக்கை எடுத்த போக்குவரத்துத்துறை கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விதிமீறல்களில் ஈடுபட்ட 1,223 பேருந்துகளுக்கு ரூ.18,76,700 அபராதமாக விதித்துள்ளது. முறையாக வரி செலுத்தாத ஆம்னி உரிமையாளர்களிடம் இருந்து ரூ.11,25,180 வசூல் செய்யப்பட்டுள்ளதுடன், விதிமீறலில் ஈடுபட்ட 8 ஆம்னி பேருந்துகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.