Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் 40 கிமீ., வேகத்தில் வாகனம் இயக்கினால் அபராதம்- காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னையில் 40 கிமீ., வேகத்தில் வாகனம் இயக்கினால் அபராதம்-  காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
, திங்கள், 19 ஜூன் 2023 (20:20 IST)
போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் தானியங்கி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு அவர்களது எண்ணிற்கு அபராதம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பயணிகள் உயிரிழந்தனர்.  பலர் படுகாயமடைந்தனர்.  இந்த விபத்திற்கு அதிவேகமாக பேருந்து இயக்கியதே காரணம் என்று என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘’இந்த விபத்திற்கு காரணமான ஓட்டுனர்கள் மற்று அப்பேருந்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ‘’சீமான் தன் டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில்,  ''சென்னையில் பகலில் வாகங்களை 40கிமீ வேகத்திலும், இரவில் 50கிமீ வேகத்திலும் இயக்க வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக'' சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மேலும், ''இந்த போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் தானியங்கி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு அவர்களது எண்ணிற்கு அபராதம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிய சாம்பியன்ஷிப் வாள் வீச்சுப் போட்டி: பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை