தமிழகத்தில் நாள் தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிக்கரித்து வருகிறது.
இதுகுறித்து முதல்வர் கூறியுள்ளதாவது: அரசு கட்டுப்பாடுகள் விதித்தாலும் மக்களின் ஒத்துழைப்பில்லாம நோயைக் குணப்படுத்த முடியாது; முகக்கவசம் அணிவதுடன் அடிக்கடி சோப்புப் போட்டு கையைக் கழுக வேண்டும்; அரசின் முயற்சிகளும் மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு அதனால் அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்தினால் கூட தவறில்லை என்று ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :
சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்பட்டும், மக்களிடம் விழிப்புணர்வு வரவில்லை. அதனால் அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்தினால் கூட தவறில்லை என்று தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மற்றொரு பதிவில், கொரோனா நோய்ப்பரவல் குறித்து எதுவும் தெரியாமல், எல்லாம் தெரிந்தவர்களைப் போல காட்டிக் கொள்வதற்காக சமூக ஊடகங்களில் வதந்திகளையும், பீதிகளையும் பரப்புபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் எல்லை மீறும் போது கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்! என தெரிவித்துள்ளார்.