Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கிராம மக்கள்: நெகிழந்து கண்கலங்கிய ஊழியர்கள்

Advertiesment
கஜா
, புதன், 28 நவம்பர் 2018 (12:47 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மின்கம்பங்களை சீர் செய்யும் மின் ஊழியர்களுக்கு கிராம மக்கள் பிரியாணி விருந்து வழங்கியிருப்பது அவர்களை நெகிழ வைத்துள்ளது.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளது. கோடிக்கணக்கான மரங்கள் நாசமாகியுள்ளன. லட்சக்கணக்கான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. மின்கம்பங்களை சீர் செய்ய பல்வேறு மாவட்ட மின் ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர்.
 
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் புயலால் பாதித்த மின்கம்பங்களை சேலத்தை சேர்ந்த மின்ழியர்கள் 40 பேர் இரவும் பகலுமாக சீர் செய்து வருகின்றனர். அவர்களுக்கு அந்த பகுதி மக்களும் இளைஞர்களும் உதவி செய்து வருகிறார்கள். இவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
கஜா
 
இந்நிலையில் நேற்று வேலை முடித்து திரும்பிய அவர்களை அழைத்து, கிராம மக்கள் பிரியாணி விருந்து அளித்துள்ளார்கள். இதனைக் கண்டு நெகிழந்துபோன மின் ஊழியர்கள் கண்கலங்கினார்கள். பிரியாணி தானே இதுல என்ன இருக்கு என நினைக்கலாம், தங்களுக்கு உதவிய ஊழியகள் திருப்தியாக இருக்க வேண்டும் என நினைத்து அந்த மக்கள் செய்த காரியம் ஈடு இணை இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடிபோதையில் பிரசவம் பார்த்த டாக்டர்: தாயும் சேயும் பரிதாபமாய் உயிரிழந்த சோகம்