காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் அதிக அளவில் கூடி உள்ளனர்.
நேற்று தமிழகத்தில் 4,538 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,60,907ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 4,538 பேர்களில் 1,243 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 83,371 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகள் எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை மூன்றாவது வாரமாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது.
நாளை ஊரடங்கு என்பதால் அசைவ உணவுகளை இன்றே வாங்கி வைக்க முந்திக்கொண்டுள்ளனர். அந்த வகையில் காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் அதிக அளவில் கூடி உள்ளனர்.
சமூக இடைவெளியின்றி மக்கள் கட்டுக்கடங்காத கூட்டமாக காசிமேட்டில் குழுமி இருப்பது கொரோனா குறித்த பயத்தையும் விழிப்புணர்வுகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.