பப்ஜி கேமில் 6 x ஸ்கோப் கொடுக்காததால் தோழனைக் கொன்றதாக ஒருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்தக் கொலைக்கான பின்னணி தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.
பப்ஜி கேமால் தன் தோழனை கொன்றவன் என்ற தலைப்பில் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
இந்தப் பதிவில் இருக்கும் நபர், தன் நண்பன் தனக்கு பப்ஜி கேமில் 6x ஸ்கோப் தராததால், தோழனை கொலை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கூகுளில் இப்புகைப்படத்தை தேடுபொறியில் தேடுகையில் சைனா டெய்லி எனும் வலைதளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு காணக்கிடைத்தது. அதில்தான் தற்போது புகைப்படத்தில் உள்ளவர்,. இவர் பெயர் ஸீஇவி. கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி அங்குள்ள பள்ளி மாணவர்களை கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள யுலின் நகர நீதிமன்றத்தில்தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படத்தில் உள்ளவர்தான் பள்ளிமாணவர்களை கொலைசெய்த குற்றவாளி ஆவார்.அவர் கோர்டுக்கு வந்த போது இப்புகைப்படம் எடுக்கப்பட்ட்டது. இதில் முக்கியமான விஷயம் பப்ஜி கேமுக்காக இந்த இளைஞர் கொல்லவில்லையாம். இது தவறான தகவலாகப் பரவி வருதவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன