Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்

இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்
, புதன், 11 மே 2022 (14:29 IST)
பொட்ரோலியத்துறை பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள் தற்போது அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இலங்கை முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் ராஜபக்‌ஷே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ராஜபக்‌ஷே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ராஜபக்‌ஷே குடும்பத்திற்கு ஹம்பன்தோட்டா பகுதியில் இருந்த அவர்களது வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வீடு கொளுந்துவிட்டு எரியும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனைத்தொடர்ந்து இலங்கையில் பசில் ராஜபக்சேவிற்கு சொந்தமான வீட்டிற்கு போராட்டகாரர்கள் தீ வைத்தனர். 
 
மேற்கு மாகாணத்தில் மல்வனை பகுதியில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. ராஜபக்சேவின் பரம்பரை வீட்டிற்கும், அமைச்சர்கள் சிலரது வீட்டிற்கும் போராட்டகாரர்கள் தீ வைத்தனர். இதனால் இலங்கையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 
 
பல இடங்களில் பொதுச்சொத்துகளை எரிக்க பெட்ரோல், டீசல் பயன்படுத்தப்படும் நிலையில் பொட்ரோலியத்துறை பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீரப்பன் சகோதரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்