தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டதாக தமிழக நிதித்துறைச்செயலாளர் தெரிவித்த நிலையில் இதுகுறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டசபையில் ஆளும் கட்சி பட்ஜெட் தாக்கல் செய்டஹது. அதன்படி தேர்தலின் போது, அக்கட்சி அறிவித்ததன்படி பெட்ரோல் மீதான்வரியை ரூ.3 குறைப்பதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மேலும் இந்த அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என தமிழ்க நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிலையில், பெட்ரோல் மீதான விலை குறைப்பு அரசாணையை இன்று தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.