தமிழகம் உள்பட பல நகரங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தாண்டியதாக செய்திகள் வெளியான நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
5 மாநில தேர்தலுக்குப் பின்னர் கிட்டத்தட்ட தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தமிழக அரசும் மத்திய அரசும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சர்வதேச சந்தையில் தினந்தோறும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதை அடுத்து தினந்தோறும் பெட்ரோல் விலையும் சென்னையில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் 33 காசுகள் லிட்டருக்கு பெட்ரோல் விலை உயர்ந்ததை அடுத்து ரூ.100.13 என்ற விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் சென்னையில் இன்று டீசல் விலை உயரவில்லை என்பதும், நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது