Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 18 May 2025
webdunia

இன்று பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியல்: தேர்வுத்துறை அறிவிப்பு

Advertiesment
பிளஸ் 2 தேர்வு
, திங்கள், 19 ஜூலை 2021 (07:45 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 ரிசல்ட் மற்றும் மதிப்பெண்கள் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பிளஸ் டூ தேர்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்கள் கடந்த சில வாரங்களாக கணக்கிடப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பிளஸ் டூ மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து 50%, செய்முறை தேர்வில் 30% மற்றும் பிளஸ் 1 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 20 சதவீதம் என கணக்கிடப்பட்டு ஒவ்வொரு மாணவர்களுக்கு இன்று மதிப்பெண் பட்டியல் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று காலை 11 மணிக்கு கீழ்க்கண்ட தேர்வு துறை இணையதளத்தில் ஒவ்வொரு மாணவரும் தங்களுடைய மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலை வரும் 22-ஆம் தேதி முதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் குறித்து தெரிந்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ள இணையதளங்கள் இதோ:
 
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dg2.tn.nic.in
www.dge.tn.gov.in
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்கிபீடியாவை நம்ப வேண்டாம்: துணை நிறுவனர் திடுக்கிடும் தகவல்!