Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஹெலிகாப்டரில் இருந்து கொட்டப்போகிறது பணம்: பரவும் வதந்தியால் பரபரப்பு

ஹெலிகாப்டரில் இருந்து கொட்டப்போகிறது பணம்: பரவும் வதந்தியால் பரபரப்பு
, வியாழன், 16 ஏப்ரல் 2020 (18:55 IST)
கொரோனா வைரஸ் காரணமாக இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது என்பது தெரிந்ததே. ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவு முடியும்வரை ஏழை எளிய மக்களுக்கான நிதியுதவி குறித்து எந்தவித அறிவிப்பையும் பிரதமர் மோடி அறிவிக்கவில்லை என்பது ஒரு குறையாக இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் ரூபாய் 15ஆயிரம் பிரதமர் மோடி தருவதாகவும் விரைவில் அனைவரது வங்கி கணக்கிலும் இந்த பணம் வரும் என்றும் ஒரு வதந்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரவியது. ஆனால் இதில் உண்மை இல்லை என்றும் இதுமாதிரியான அறிவிப்பு எதுவும் பிரதமரிடம் இருந்து வரவில்லை என்றும் அரசு உறுதி செய்தது
 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வதந்தி காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இந்த வதந்தியின் ஹெலிகாப்டரில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளாக தூவ உள்ளதாகவும் இதனை மக்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அந்த வதந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வதந்தியும் காட்டுத் தீ போல் அனைத்து சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. மீண்டும் இந்த அறிவிப்பு போலியானது என்றும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது
 
கொரோனா வைரஸ் காரணமாக வேலையின்றி வீட்டில் பசியோடு இருக்கும் மக்களுக்கு இம்மாதிரியான வதந்தியை பரப்பி அற்ப சந்தோஷம் அடையும் நபர்கள் நிச்சயம் கொடூர மனம் படைத்தவர்களாகதான் இருப்பார்கள் என்று கருதப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிளாஸ்மா சிகிச்சை என்பது என்ன?