பிரதமர் மோடி இரண்டு நாள் தமிழக சுற்றுப்பயணம் வந்த நிலையில் அவர் சென்னை வேலூர் உள்பட பல பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பதை பார்த்தோம். குறிப்பாக சென்னையில் நடந்த ரோடு ஷோ பரபரப்பு ஏற்படுத்தி நிலையில் அவர் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முழுக்க முழுக்க திமுகவை தான் அட்டாக் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திமுகவின் வாரிசு அரசியல், ஊழல் மற்றும் கச்சத்தீவு பிரச்சனை ஆகியவை குறித்து தான் பிரதமர் மோடி, சென்னை வேலூர் நீலகிரி ஆகிய பகுதிகளில் பேசினார் என்பதும் அவரது டார்கெட் திமுகவை விமர்சனம் செய்வது மட்டுமாகத்தான் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு நாட்களாக அவருடைய பிரச்சாரத்தில் அதிமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை என்றும் அதனால் இன்னும் அவருக்கு ஒரு ஓரத்தில் அதிமுக மீது பாசம் இருக்கிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
அவரது பேச்சில் முழுக்க முழுக்க திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளை கண்டனம் தெரிவிப்பதில் மட்டும்தான் இருந்தது என்று கூறப்படும் நிலையில் ஒருவேளை தேர்தலுக்கு பின்னர் அதிமுகவின் உதவி தேவைப்படும் என்பதால் அதிமுகவை குறித்து அவர்கள் விமர்சனம் செய்யாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.