இன்று மன் கீ பாத் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி கொரொனா காலத்திலும் அனிமேஷன் வீடியோ மூலம் பாடம் நடத்திய தமிழக ஆசிரியரை பாராட்டியுள்ளார்.
மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றும் மன் கீ பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த மாதத்திற்கான மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார்.
அதில் அவர் நாய் ஒன்று நடப்பதற்காக சக்கர நாற்காலி செய்த கோவையை சேர்ந்த காயத்ரி என்ற சிறுமியை பாராட்டியுள்ளார். இது நமக்கு ஊக்கமளிப்பதாகவும், மற்ற விலங்குகளிடம் அன்புடன் இருக்கும்போது இது சாத்தியமாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுபோல கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பள்ளி பாடங்களை அனிமேஷன் வீடியோவாக தயார் செய்து பெண்டிரைவ் மூலமாக மாணவர்களுக்கு அளித்த விழுப்புரத்தை சேர்ந்த ஹேமலதா என்ற தமிழ் ஆசிரியரையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.