Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிகரெட் கொளுத்தி விஜய் - டிவிட்டர் டிரெண்டிங்கில் முதல் இடம்

Advertiesment
Twitter
, சனி, 7 ஜூலை 2018 (17:25 IST)
சர்கார் படத்தில் விஜய் புகைப்பிடிப்பது போல போஸ்டர் வெளியானது டிவிட்டரில் விஜய் ரசிகர்களுக்கும், பாமக ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான மோதலாக உருவெடுத்துள்ளது.

 
நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தவே, விஜய் புகைபிடிக்கும் காட்சியை போஸ்டரில் இருந்து நீக்க வேண்டும் என சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன் தொடர்ச்சியாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த போஸ்டரை நீக்கி விட்டனர்.
Twitter

 
இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாமகவினர் டிவிட்டரில் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் ‘குடிசை கொளுத்தி பாமக’ என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி, பாமகவிற்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்தனர். இதனால், அந்த ஹேஸ்டிக் டிரெண்டிங்கில் வந்தது.
Twitter

 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘சிகரெட் கொளுத்தி விஜய்’ என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ஏராளமான பாமகவினர் மற்றும் அஜித் ரசிகர்கள் விஜய்க்கு எதிராக டிவிட் போட தற்போது ‘சிகரெட் கொளுத்தி விஜய்’ என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடத்தில் இருக்கிறது.

Twitter


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரன் ஆர்ப்பாட்டத்தில் 50 பேரின் செல்போன், பணம் திருட்டு : தொண்டர்கள் அதிர்ச்சி