Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கொரோனா குறையாத ஒரே நாடு இந்தியா தான்: டாக்டர் ராமதாஸ்

கொரோனா குறையாத ஒரே நாடு இந்தியா தான்: டாக்டர் ராமதாஸ்
, புதன், 9 செப்டம்பர் 2020 (13:45 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் சுமார் 200 நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்கா இந்தியா பிரேசில் ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் தினந்தோறும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இன்று ஒரே நாளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் பிரேசிலில் குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே கொரோனா வைரஸ் குறையாத ஒரே நாடு இந்தியா என்ற புள்ளிவிவரம் இந்திய மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது
 
இந்த நிலையில் இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
 
கொரோனா தினசரி பாதிப்புகள் அமெரிக்காவில்  28,561 ஆகவும், பிரேசிலில் 17,330 ஆகவும் குறைந்து விட்டது. ஆனால், இந்தியாவில் 89,852 ஆக அதிகரித்து விட்டது. உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 2.47 லட்சம் தொற்றுகளில்  மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்பட்டவை
 
கொரோனா தொற்று பரவத் தொடங்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்றும் குறையத் தொடங்காத ஒரே நாடு இந்தியா தான். எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மக்கள் இதை கருத்தில் கொண்டு  மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்!
 
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவை போல தமிழகத்தில் சர்க்கரைக்கு பதில் இனி வெல்லம்??